Saturday, January 9, 2010

புலிப்பட்டம் சூட்டப்பட்ட அப்பாவி இளைஞர்கள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட 700 புலிகள் உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவினால் விடுவிக்கப்பட்டதாக இன்றைய தினம் வெளியான செய்தி ஒரு போலி நாடகம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இறுதி யுத்த காலத்தில் வன்னியிலிருந்து தமது குடும்பத்தினருடன் இணைந்து வந்த குறித்த வயதானவர்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு தனித்து அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை.

இவ்வாறு பிரித்து வைக்கப்பட்டிருந்தவர்களையே தேர்தல்களுக்காக அவர்களது குடும்பத்தினருடன் இணைத்து விட்டு புலிகளை விடுவித்ததாக நாடகமாடுவதாகக் கூறப்படுகிறது

No comments:

Post a Comment