எதிர்வரும் தேர்தலின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது குறித்து அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன் அரசாங்கமும் பல்கலைக்கழக மாணவர்களின் துணையுடன் எதிர்க்கட்சிகளும் இவ்வாறான கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கருத்துக் கணிப்புகளின் படி தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேக்கா ஆகிய இருவரும் சம பலத்துடன் இருப்பதாகவும் மலையகப் பகுதிகளில் சரத் பொன்சேக்கா முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆறுமுகம் தொண்டமானின் இதொக மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையிலும் மலையகப் பகுதிகளில் சரத் பொன்சேக்கா முன்னிலை வகிப்பது அரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்தத் தேர்தல்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத போதிலும் அங்கும் சரத் பொன்சேக்காவுக்கே அதிக ஆதரவு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Saturday, January 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment